தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற திமிரு, ஆணவம் இருந்தால் நஷ்டம் நமக்கே

தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற திமிரு, ஆணவம் இருந்தால் நஷ்டம் நமக்கே

If we are arrogant and arrogant that we are the only ones who know everything, we are at a loss

தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற திமிரு, ஆணவம் இருந்தால் நஷ்டம் நமக்கே

ஒரு மலையடிவாரம் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதனால், அங்கே மலையடிவாரத்தில் பச்சைப்பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.

அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.

ஒரு நாள் ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து பயந்து தப்பி ஓடி முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம் என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன் என்று அமைதியாக சொன்னது.

முரட்டு ஆடோ, அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டைப்போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சமாதானமாகவே பேசியும், முரட்டு ஆடு கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று சண்டையிட்டது.

மலைச்சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது.

கருத்து: தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற திமிரு, ஆணவம் இருந்தால் நஷ்டம் நமக்கே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain