Buy Exam Books Here | |
To Join Whatsapp | |
To Follow FaceBook | |
To Join Telegram Channel | |
To Follow Twitter | |
To Follow Instagram |
பெண்களுக்கான கல்வி
உதவித் தொகைக்கான திட்டம்
அறிவிப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ), அமைச்சகம் சார்பில்
பெண்களுக்கான கல்வி
உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்
ஆண்டு இளங்கலை (பி.இ
மற்றும் பி.டெக்
முழுநேர நான்கு ஆண்டு
பட்டம்) மற்றும் முதுகலை
எம்.டெக் மற்றும்
எம்.இ., இரண்டு
ஆண்டு படிக்கும் பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட
உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 20 பேருக்கு உதவித் தொகை கிடைக்கும். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங், ஸ்பேஸ் இன்ஜினியரிங் & ராக்கெட்ரி மற்றும் ஏவியோனிக்ஸ் படிக்கும் மாணவிகளும் பயன் பெறலாம். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித் தொகை கிடைக்கும்.
மேலும், 2020-21 ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டில் படிக்கும் பி.இ மாணவர்கள் 10 பேருக்கும் இந்த உதவித் தொகை கிடைக்கும்.
2020-21 ஆம் ஆண்டில் முதல் ஆண்டில் படிக்கும் ME / M.Tech /M.Sc Engg பாடத்திட்டத்தில் சேர்க்கை பெற்று இருக்க வேண்டும். இந்த கல்வி உதவி தொகை JEE (முதன்மை) தகுதி தேர்வு மற்றும் கேட் (GATE) தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
அதில், 70 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித் தொகை கிடைக்கும்.
மேலும், உதவித் தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படக்கூடிய அனைத்து சோதனைகள் மற்றும் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வரும் 31-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. https://rac.gov.in என்ற இணையத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.